சமையல் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 சதவீத சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் கருத்துரைக்கையில், சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போதும், எரிவாயு கிடைக்காமையினால் பலர் தமது தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்களது குடும்பத்தினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
🛒 இணையம் ஊடாகவும் பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





