4 மணித்தியாலத்துக்கு அதிக காலம் மின்துண்டிப்பு!

சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நாளாந்தம் சுமார் 4,000 மெட்ரிக் டன் எரிபொருள் தேவைப்படுகிறது. (22) இரண்டாயிரம் மெட்ரிக் டன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் 550 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுத்தப்பட்டன.

எரிபொருள் தேவை 4,000 மெட்ரிக் டன் ஆகும். எனினும், 1,000 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இதன்படி தினம் 3,000 மெட்ரிக் டன் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.

அவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டால் தேசிய மின் கட்டமைக்கு 750 மெகாவொட் மின்சார இல்லாது போகுமென பொதுப்பயன்பாடு ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்