யாழ்ப்பாணம், சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும்.
யாழ் முற்றவெளி மைதானத்தில் கண்காட்சி நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது.
கண்காட்சியின் இரண்டாவது நாளான நேற்று (22) கண்காட்சியை ,வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆரம்பித்து வைத்தார்
யாழ்ப்பாணம் முற்றவெளியில கண்காட்சி இன்று இரவு எட்டு மணியளவில் நிறைவடையும்.
யாழ்ப்பாணம், கண்காட்சி இம்முறை 12 ஆவது தடவையாகவும் இடம்பெறுகிறது.
வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு,யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகம் இணைந்து கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்பத்திகளை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. 47 விற்பனைக் கூட நுகர்வோர் பொருட்களும், உழவு இயந்திர வாகனம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பாகங்களின் வாகனங்களும் தொழில் முயற்சியினை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கூடாரங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தைப் போன்றே இம்முறையும் பெருந்திரலானவர்கள் கணகாட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com