அடுத்த வருடத்திற்காக, இலங்கைக்கு குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த உடன்படிக்கை இந்த வாரத்திற்குள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
கடந்த 2 இரண்டு ஆண்டுகளில், எரிவாயுவை இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனம், மெட்ரிக் டன் ஒன்றுக்கு அறிவிட்ட தொகையை விடவும் 9 டொலர் குறைவாக, புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஓமான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, இடம்பெற்ற விலைமனு கோரலின் அடிப்படையில், புதிய நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த மாத இறுதியுடன் நாட்டுக்கு அவசியமான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இலங்கையின் சமையல் எரிவாயு கேள்வியில் 70 சதவீதமானவை குறித்த நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.
குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தந்திற்கு அமைய, ஒரு வருட காலத்திற்காக இலங்கைக்கு 3 இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயு விநியோகிக்ப்பட உள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com





