அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி குறைவடைந்தது!

இன்றைய தினம் உரிமம் பெற்ற பல வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றை 365 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.

உரிமம் பெற்ற வணிக வங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 380 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியிருந்தது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதி 15 ரூபாவினால் குறைவடைந்துள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, மக்கள் வங்கி, DFCC வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி வங்கி என்பன இத்தகைய விற்பனை பெறுமதிகளை பதிவு செய்திருந்தன.

இதேவேளை, நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய, டொலரொன்றின் விற்பனை பெறுமதி 377 ரூபா 49 சதமாக பதிவாகியிருந்ததுடன், கொள்முதல் பெறுமதி 364 ரூபா 22 சதமாக பதிவாகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் ரூபாவை மிதப்பில் விட மேற்கொண்ட தீர்மானத்தை அடுத்து, அதன் பெறுமதி வலுப்பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முன்னேற்றங்களின் பிரதிபலிப்பாக, ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 44.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளது.

பதவியேற்ற அன்றே..
அமெரிக்கா, இந்தியா, யப்பான் இலங்கைக்கு பெருமளவு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது

பதவி ஏற்று மறுநாள் டொலர் விலை 15 ரூபாவால் குறைந்திருக்கின்றது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு உணவுப்பொருட்களும் உரங்களும் எரிபொருட்களும் வெளிவர ஆரம்பித்துள்ளது.

ரணில் என்னும் ஒற்றைத்தேசியப்பட்டியல் வல்லரசுகளின் செல்லப்பிள்ளை


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்