வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் சிக்கினர்!

நீர்கொழும்பு காவல்துறையினரால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகுதியுடன் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்த 46 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கையில் உள்ள உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி  hi2world.com


யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்