ரஷ்ய போரால் யுக்ரேனுக்கு இதுவரை 564.9 பில்லியன் டாலர் இழப்பு

யுக்ரேனில் ரஷ்யா படையெடுப்பு நடத்திவரும் நிலையில், இதனால், யுக்ரேனுக்கு 564.9 பில்லியன் டாலர் (429.3 பில்லியன் பவுண்ட்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் பொருளாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த இழப்பில், உள்கட்டமைப்பு, பொருளாதார இழப்பு உள்ளிட்டவை அடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால், 8,000 கி.மீ தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், 10 மில்லியன் சதுரமீட்டர்கள் அளவுக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதார அமைச்சர் யுலியா ஸ்விரிடென்கோ சமூக வலைத்தள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனை ஆயுதமற்ற நாடாக மாற்றும் நோக்கத்தோடு “சிறப்பு ராணுவ நடவடிக்கையை” மேற்கொண்டு வருவதாக ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது.

தூண்டப்படாத படையெடுப்புக்கான சாக்குப்போக்காக, ரஷ்யா இவ்வாறு கூறிவருகிறது என, யுக்ரேன் மற்றும் மேற்கு நாடுகள் தெரிவித்துவருகின்றன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

bbctamil

சிறப்புச் செய்திகள்