மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தி வடை விற்பனை

நுவரெலியா பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வர்த்தகர் ஒருவர் வடையின் விலையை காட்சிப்படுத்தாமல் வடை தயாரிக்கும் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் (2019) விற்பனையான விலையையும் தற்போதைய ஆட்சியில் விற்பனையாகும் (2022) விலையையும் காட்சிப்படுத்தி வடை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றத்தால் தாம் வடையின் விலையை அதிகரித்துள்ளதாகவும், வடை விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர்கள் வினவியதால், வடை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.


🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com


⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!


🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com


🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்