மில்கோ நிறுவனத்துக்கு ஜனாதிபதி விஜயம்

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இன்று (25) காலை பார்வையிட்டார்.

தொழிற்சாலை வளாகத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நிறுவனத்தின் உற்பத்தி, பொதியிடல் மற்றும் விநியோகப் பிரிவுகளைப் பார்வை யிட்டார்.

தேசிய பால் சபை 1956 இல் நிறுவப்பட்டதுடன் 1986 இல் மில்கோவாக மாற்றப்பட்டது.

முதற்கட்டமாக பதனிடல் பால் உற்பத்திக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்நிறுவனம், தற்போது தயிர், ஐஸ்கிரீம்போன்ற பொருட்களை தயாரித்து உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளது.

அம்பேவெல, திகன, பொலன்னறுவை மற்றும் நாரஹேன்பிட்ட ஆகிய நான்கு தொழிற்சாலை களில் கிட்டத்தட்ட 1,500 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனம் தினமும் 50,000 லீற்றர் பால் கொள்ளளவைக் கொண்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து திரவப் பாலை போட்டி விலையில் கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகளின் நலனில் தலையிடுவதாகவும் நிறுவனத்தின் நிர்வாகம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்