இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் கப்பலுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலிலுள்ள 28,300 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 9000 மெற்றிக் தொன் விமான எரிபொருள் நாளை முதல் இறக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில் 37,300 மெற்றிக் தொன் டீசல் ஏற்றி வந்த கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்ட தாகவும், அதன்படி நாளைய தினம் நாட்டின் டீசல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்பு 74,600 மெட்ரிக் தொன்னாக இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த வருடத்தின் இரண்டாவது நாணயக் கொள்கை மீளாய்வில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com