சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது குறித்து அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிப்பதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

எவ்வாறிருப்பினும் கடந்த வாரம் , இலங்கை அரசாங்கத்தினால் தற்போதுவரை நிதியுதவியை வழங்குமாறு எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களப் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்திருந்தார்.

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ரீதியான ஆதரவைக் கோரியிருப்பதாகவும் அதற்கிணங்க நிபுணர்குழுவொன்று விரைவில் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்திற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பேரண்ட நிதிப்பிரிவின் இயலுமையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும் அச்செயற்திட்டம் ஜனவரி 20 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக ஆரம்பிக்கப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பதிலளித்திருந்தது.

இந்நிலையில் கொழும்பிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு நான்காவது மீளாய்வுப் பணிகளைப் பூர்த்திசெய்திருப்பதாகவும் அதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையில் கலந்துரையாடப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிவிப்பு தொடர்பில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்