பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல் – பீரிஸ் – ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மிகவும் வினைத்திறனாக இந்த பேச்சுவார்த்தை அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – இந்திய ராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு பூர்த்தியைப் பொருத்தமான முறையில் அனுஷ்டிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை சக்திமயப்படுத்தல், அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும், இந்த விடயத்தில் இரண்டு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர பொறிமுறை ஒன்றை விரைவில் கொண்டுவர வேண்டும் என இணங்கப்பட்டதாகவும் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்