உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:- பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது.
இதற்கு டிக்டொக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம். மேலும் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளனர்.
நியூயோர்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மெட்டா மட்டுமில்லாமல் ட்விட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது. இளைய தலைமுறையை சேர்ந்த பயனர்கள் தமது போட்டியாளர்களின் தளங்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளமையே காரணமாகும்.
மேலும் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐஓஎஸ்சில் அமுல்படுத்தியுள்ள தனிநபர் உரிமைகளின் மாற்றம், விளம்பர நிறுவனங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள பயன்பாட்டாளர்களை அளவிடுவதை கடினமாக்கியுள்ளது.
இதுவே 1000 கோடி டொலர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மார்க் ஸக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்துள்ளது.
மேலும் டிக்டொக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் அதிவேகமாக வளர்ந்து வருவதும் பேஸ்புக்கின் பயனர்கள் குறைவதற்கு ஒரு காரணம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com