பெறுமதி சேர் வரிச் (VAT) சட்டத்தில் திருத்தங்கள்

பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் (VAT) திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்க நிதிப் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க நிதி பற்றிய குழு, நேற்று கூடிய போது 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

பாதீட்டின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலம் நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்