இலங்கைக்கு பணம் அனுப்புதல் அதிகரித்திருக்கிறது

தொழிலாளர் பணவனுப்பல்கள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதிவுசெய்யப்பட்டிருந்த 271 மில்லியன் டொலரிலிருந்து டிசம்பர் மாதம் 325 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020 இல் பதிவுசெய்யப்பட்டிருந்த 7 ஆயிரத்து 104 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் 2021இல் 5 ஆயிரத்து 491 மில்லியன் டொலராக விளங்கியதன் மூலம் 22.7 சதவீத வீழ்ச்சியைப் பதிவுசெய்திருந்தன.

வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்காக நாட்டிலிருந்தான மொத்தப் புறப்படுகைகள், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 2021 டிசம்பர் மாத காலப்பகுதியில் 24 ஆயிரத்து 241 இற்கு 22.4 சதவீத வளர்ச்சியொன்றுடன் தொடர்ந்தும் அதிகரித்தது.

முக்கியமாக வீட்டுப்பணிப் பெண்கள், தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சியற்ற வகை தொழிலாளர்களினால் இதற்கு பங்களிக்கப்பட்டிருந்ததெக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்