மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் அச்சுத் தொழில்துறையானது செயற்பாடுகளைத் தொடர்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.
இந் நிலையில் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் காகிதத்தின் விலை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் சமீபத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு ஒவ்வொரு மாதமும் இறக்குமதி செய்யப்படும் 120,000 தொன் காகிதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காகிதத்தின் வீதம் தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது.
இதற்கிடையில், உள்ளூர் சந்தையில் மை மற்றும் டோனர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
முன்னதாக, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் பள்ளி பயிற்சி புத்தகங்களுக்கான புத்தக வெளியீட்டு செயல்முறை 70 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
எனவே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இதே நிலை நீடித்தால், இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளை திறக்கும் போது, பாட புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com
⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com