நாளை 11 மணிநேரம் மாத்திரமே மின்சாரம்

நாளைய தினம் 13 மணிநேரம் மின் தடை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோாியுள்ளது.

தற்போது நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபையினால் இந்த மாதம் 5 ஆம் திகதி வரை இவ்வாறான மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 15 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அட்டவணை இலங்கை பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவினால் வெளியிடப்படவுள்ளது.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்