நாட்டில் 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள்

2020ஆம் ஆண்டு 611 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாஸ்டிக் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

UN COMTRADE தரவுத்தளத்தின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகர் ஹேமந்த விதானகே உள்ளிட்ட சூழல் ஆர்வலர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது. சிங்கராஜ வன வலயத்தால் கையகப்படுத்தப்படவுள்ள ஏனைய காடுகள் மற்றும் சிங்கராஜா வனப்பகுதியை அண்மித்துள்ள சுற்றாடல் பாதிப்புக்குக் காரணமான மனித செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை வருடாந்தம் சுமார் 300,000 தொன் பிளாஸ்டிக்கை இறக்குமதி செய்கிறது, அதில் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சட்டவிரோதமாக சுற்றுச்சூழலில் கொட்டப்படுகிறது.

பெரும்பாலானவை மனிதர்களால் எரிக்கப்பட்டு பாரிய காற்று மாசை ஏற்படுத்துகின்றன.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்