தொடர்ந்து எரிபொருளை இலங்கைக்கு வழங்க முடியாது

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா குறிப்பிடுகிறார்.

எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிய கப்பல் வந்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத் தாபன நாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்