டொலருக்கு மேலதிக கொடுப்பனவு இடைநிறுத்தம்!

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 225 ரூபா 20 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 229 ரூபா 99 சதமாகவும் பதிவாகி இருந்தது.

இதற்கமைய, வெளிநாட்டுப் பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் அமெரிக்க டொலருக்காக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 8 ரூபா மேலதிக கொடுப்பனவுடன், அவர்களுக்கு டொலர் ஒன்றுக்காக 238 ரூபா அளவில் கிடைக்கும்.

எனவே, வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்