கறுப்புப்பட்டியலில் இருந்து மக்கள் வங்கியை நீக்கியது சீனா

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பான கடன் சான்றுப்பத்திரத்திற்குரிய 6.9 மில்லியன் டொலர்கள் இலங்கையினால் செலுத்தப்பட்டதையடுத்து சீனாவினால் அதன் கறுப்புப்பட்டியலில் இருந்து மக்கள் வங்கி நீக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பான ஒப்பந்தத்தை மீறி கடன் சான்றுப்பத்திரத்திற்கான கொடுப்பனவைச் செலுத்தாமையினால் மக்கள் வங்கியைக் கறுப்புப்பட்டியலில் இணைப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் கடந்த 2021 அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அறிவித்திருந்தது.

சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகத்தினால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தூதரகம் விளக்கமளித்திருந்தது.

வர்த்தக சட்டதிட்டங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகக்கொள்கைக்கு அமைவாக மக்கள் வங்கி செயற்படவில்லை என்றும் சேதனப்பசளை இறக்குமதி விடயத்தில் ஒப்பந்தத்திற்கு அமைவாக கடன் சான்றுப்பத்திரத்திற்கான கொடுப்பனவைச் செலுத்தாமையினால் சீன நிறுவனத்திற்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவ்வேளையில் சீனத்தூதரகம் சுட்டிக்காட்டியிருந்தது.

சீனாவினால் வெளியிடப்பட்ட கறுப்புப்பட்டியல் அறிவிப்பையடுத்து அதுகுறித்து விளக்கமளித்திருந்த மக்கள் வங்கி, இரு வர்த்தக மேல் நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு அமைவாகவே, வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தரப்பிற்கு வழங்கப்பட்ட கடன் சான்றுப்பத்திரத்திற்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை என்றும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவே வங்கி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன் கடிதத்திற்கு அமைவாக சீன உரநிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், சீனாவின் கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு மக்கள் வங்கி சீனத்தூதரகத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்தது.

அக்கோரிக்கைக்கு அமைவாக சீனத்தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக செயலகம் அதன் கறுப்புப்பட்டியலிலிருந்து மக்கள் வங்கியை நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்