கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயம் முன்னேறலாம் என்பதற்கு உதாரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நபர்களை சுட்டிக்காட்டலாம். அந்த லிஸ்டில் தற்போது இணைந்திருக்கிறார் சங்ப்பெங் சாவோ (Changpeng Zhao) இவரைச் சுருக்கமாக CZ என்று அழைக்கிறார்கள். ஒரு காலத்தில் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணிபுரிந்த சங்ப்பெங் சாவோ இப்போது தனது சொத்து மதிப்பில் இந்தியாவின் முக்கிய பணக்காரரான முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.

கனடாவிற்குக் குடியேறிய குடும்பம்

சீனாவில் பிறந்தவரான சங்ப்பெங் சாவோ அவரது 12 வயதில் குடும்பத்துடன் கனடாவில் குடியேறினார். கணினி அறிவியலில் பட்டப்படிப்பினை முடித்த இவர், தனது இளமைக்காலத்தில் பல்வேறு சிறிய சிறிய வேலைகளை செய்திருக்கிறார். குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக உதவ நினைத்த சாவோ உலகப்புகழ் பெற்ற மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திலும் தனது இளமைப்பருவத்தில் பணியாற்றியுள்ளார்.

கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், மென்பொருள் கட்டமைப்பாளராக பணியைத் துவங்கிய சாவோ, கிரிப்டோ கரன்சி மீதுள்ள ஆர்வத்தால் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு வேலை செய்யத் துவங்கினார்.

ஊழியர் டு உரிமையாளர்

பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த சாவோ, கடந்த 2007 ஆம் ஆண்டு பினான்ஸ் (Binance) நிறுவனத்தைத் துவங்கினார். கிரிப்டோ கரன்சி எக்சேஞ் நிறுவனமான Binance சாவோ-வின் வாழ்க்கையையே மாற்றியது என்றே சொல்லவேண்டும். 44 வயதான அவரது சொத்து மதிப்பு 96 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முகேஷ் அம்பானியை அவர் முந்தியுள்ளார். ப்ளூம்பெர்க் இண்டெக்சின் படி இந்தியாவின் முகேஷ் அம்பானி 92.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து வைத்திருக்கிறார். சாவோவின் உண்மையான சொத்துமதிப்பு இதற்கும் கூடுதலாக இருக்கும் எனவும் பேசசுகள் அடிபடுகின்றன. ஏனெனில் கடந்தாண்டு மட்டும் Binance நிறுவனம் அபரிமிதமான லாபத்தைக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

behindwoods.com


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱