எதிர்வரும் காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய்யும் சுத்திகரிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் போலியான விடயங்களை முன்வைத்தமையால் சந்தையில் தேங்காய் எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்படுவதாக தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.
அத்துடன் தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
தற்போது சந்தையில் ஒரு போத்தல் தேங்காய் எண்ணெய் 700 ரூபாவரையில் அதிகரித்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் தேங்காய் எண்ணெய்க்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனவும் தெங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்க தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உரிய தரத்துடன் இல்லை என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
⏰ யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!
🏠 வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com
📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்
🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com
🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப இலகுவழி hi2world.com