இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள்ஆகியவை முரண்பட்டிருப்பதாகத் தென்படுகின்றமை நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது

*சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம்உலை எண்ணெய் பற்றாக்குறையால் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது

*குறைந்தளவு மழைவீழ்ச்சியால் நீர்மின் உற்பத்தியும் சவாலாக உள்ளது

*ரந் தெனிகல நீர்த்தேக்கம் ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொத்மலைக்கும் கடந்த வாரம் முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

*உலர் வலயத்தில் அமைந்துள்ள வீடுகளின் கூரைகளில் சூரியக்கலன்களை பொருத்துவதே இதற்கு மாற்றாக அமையுமென நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

*2030 ஆம் ஆண்டிற்குள் மீளப் புதுப்பிக்கத்தக்கசக்தியை 70%பிறப்பித்து 2050 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக கார்பன் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

நிலவும் மின்சார நெருக்கடி இலங்கையர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை மக்கள் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வது பற்றி தயக்கத்துடனிருந்தனர் , தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடியுடன் தொடர்ச்சியான மின் தடைகளை எதிர்கொள்ளபொது மக்கள் தயாராகி வருகின்றனர். பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அதிகாரிகள் ஏன் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகவில்லை என்பது பற்றி சந்தேகம் சூழ்ந்திருக்கிறது.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபை ), இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சுக்கள் முரண்பட்டிருப்பதாகத் தெரிகிறது; இது நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.

இந்தியஎண்ணெய் நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்கடொ லர் கடன் பெற மின்சக்தி அமைச்சர் திறைசேரியிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் இந்த விடயம் குறித்துதிறைசேரி இன்னும் பதிலளிக்கவில்லை.

இன்னரும் சில நாட்களுக்கு சமாளிக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தந்த அமைச்சர்கள் உறுதிசெய்துள்ள போதிலும், நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் அத்தகைய கொள்வனவுகளை எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.


யாழில் இருந்து தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரமும் தமது வர்த்தக நிலையம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்


🛒 யாழில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com


🌍 புலம்பெயர் நாட்டில் இருந்து 🇱🇰இலங்கையில் உள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப இலகுவழி ( அங்கர், கோதுமை மா, சீனி, அரிசி உட்பட ) hi2world.com