இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பின்னடைவு!

இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், முந்தைய கணிப்பினை விட மெதுவாக செயல்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

வருடத்தில் இரு முறை உலக வங்கியினால் வெளியிடப்படும் பிராந்திய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் தெற்காசிய நாடுகளில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 2023ஆம் ஆண்டில் 6.3 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை பற்றி குறிப்பிடுகையில், பொருளாதாரம் நம்பத்தக்க வகையில் அமையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் அதன் தன்மையை உரிய முறையில் மதிப்பிட முடியாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் பாரிய பிரச்சினை எதிர்நோக்கப்படுவதாகவும் உலக வங்கியின் தெற்காசிய நாடுகளுக்கான உப தலைவர் ஹாட்விக் ஷபர் தெரிவித்துள்ளார்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

⏰ யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 “தாரணி சூப்பர்மார்கெட்” வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்