சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை ஈடுபட்டுவரும் நிலையில், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு சீனா எப்போதும் தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குப் பெருமளவிலான இறக்குமதிகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனா பிரதான இடத்தை வகிப்பதுடன் கடந்த காலங்களில் சீனா எமது நாட்டிற்குப் பல்வேறு உதவிகளையும் வழங்கியதாகக் கடந்த புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமானதிலிருந்தே இருநாடுகளும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்திவருகின்றன என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

‘இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி என்பவற்றுக்கு அவசியமான உதவிகளை சீனா எப்போதும் வழங்கிவந்திருப்பதுடன் எதிர்வருங்காலங்களிலும் அதனைத் தொடர்ந்து வழங்கும்’ என்றும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சீனாவிடமிருந்து புதிதாகக் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. பேச்சுவார்த்தைகள் ஓரளவிற்கு முன்னேற்றகரமான நிலையிலிருப்பதுடன் இறுதிக்கட்ட முடிவுகள் எடுக்கப்பட்டவுடன் அவைபற்றி அறிவிக்கப்படும் என்று அஜித் நிவாட் கப்ரால் கடந்த புதன்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🏠 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

🌎 உலகத்தில் எப்பாகத்தில் இருந்தும் இலங்கை வடக்கில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பொருட்கள் அனுப்ப சிறந்த இணையதளம் hi2world.com

🛒 Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱