இந்தியாவின் – இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ‘கிரிம்சன் ரோஸ்’ (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் காலநிலை மாற்றம் மற்றும் உணவு தேவைக்காக வடகிழக்குப் பருவ பெயர்ச்சி மழைக்கு முன்னர், மலைப்பகுதிகள் நோக்கி இடம்பெயரும் ஆற்றல் கொண்டுள்ளதாக, த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

நீண்ட தூரம் பயணிக்கும் இயல்புடைய குறித்த வகை வண்ணத்துப்பூச்சிகள் நேற்றுமுன்தினம் முதல் இவ்வாறு இடம்பெயர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடல் வழியாக இலங்கை வருவதற்கு முன்னதாக இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியின் கரையோரங்களில் உள்ள மலர்களில் தேன் அருந்தி விட்டு பயணிப்பதாக இந்திய இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும், இந்த வகையான வண்ணத்துப்பூச்சிகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com