அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு

சந்தையில் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

நிதியமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவினால் பிரதேச செயலகங்களின் ஊடாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் அரிசி, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் ஆராயவுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பல பாரவூர்திகள் சேவையில் இருந்து விலகியுள்ளன.

இதனால் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்