அத்தியாவசிய உணவு, மருந்து பொருட்களிற்கான வரிகள் நீக்கம்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.


யாழில் உள்ள உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் பரிசு மழை!

நீங்கள் வாங்கும் 3 பில்லுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲
3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

நீங்களும் ஒரு அதிர்ஷ்டசாலியாக வேண்டும் எனின் காலம் தாழ்த்தாது இன்றே நேரடியாக விரையுங்கள் உங்கள் தாரணி சூப்பர்மார்க்கெட்டிற்கு

⏰ உங்கள் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.!

🛒 தாரணிசூப்பர்மார்க்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற யாழில் இருந்து வழி செய்கிறது lankaface.com

Shop Now: tharanysupermarket.com

1 ஆம் பரிசு: ஒரு பவுன் தங்க கட்டி 🪙
(8 gram gold)

2 ஆம் பரிசு: சம்சும் டேப்லட் 📲

3 ஆம் பரிசு: சாம்சுங் மொபைல் 📱

சிறப்புச் செய்திகள்