இரணைமடுக்குளத்தின் தண்ணீர்! அழுபவர்கள் எல்லோரும்…

இரணைமடுக்குளத்தின் தண்ணீர் கடலோடு கலக்கிறது என்று அழுபவர்கள் எல்லோரும்;

“ஆறுமுகம் திட்டம்” எனப்படும் River for Jaffna என்ற நீர் மேலாண்மை பற்றி கொஞ்சம் தேடிப்படியுங்கள்.

வல்லை வெளியூடாக தொண்டைமானாறு கடலோடு எத்தனை லச்சம் லீற்றர் மழை நீர் கடலோடு கலக்கிறது என்பதை சந்நிதி கோயில் பாலத்தில் ஏறி நிண்டு பார்த்து ரசிக்கவும்.

இரணைமடுக்குளத்தின் வான் பாயும் மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுதிட்டத்தோடு (River for Jaffna) கலக்க விடுவதற்கு கிளிநொச்சி மக்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. அப்படி அவர்கள் செய்யவும் மாட்டார்கள்.

யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு பின்னர் இரணைமடுக்குளத்தின் மேலதிக நீரை அதனோடு இணைக்கும் வேலையை செய்யாமல் விட்டுப்போட்டு…..

கிளிநொச்சி சனம் தண்ணி தாறாங்கள் இல்லை எண்டும்;

சும்மா வீணா கடலோடு தண்ணி கலக்குது எண்டு புலம்புவதிலும் பலன் இல்லை.

இரணைமடுக்குளத்தின் மேலதிக வான் பாயும் நீரை யாழ்பாணத்தில் எங்கே சேமிக்கப்போறியள் எண்டு எவனாவது சொல்லமுடியுமா?

அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள். நான் நாளைக்கே இரணைமடுத்தண்ணியை கேட்டு வாங்கித்தாறன்.

வடமராட்சிக்கிழக்கு தாளையடியில் பல பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் என்னாச்சு?

இரணைமடுக்குளத்தின் மேலதிக தண்ணிர் அந்தக்கடலோடுதான் கலக்கிறது.

வேணுமெண்டால் அதை சுத்திகரிச்சு குடியுங்களன்.

சும்மா என்னத்துக்கு கிளிநொச்சி சனத்தை நோண்டுறியள்?

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்