ஹவாய் கடற்கரையில் வீரியமடையும் சுனாமி அலைகள், தொடரும் பதற்றநிலை!

ஹவாய் கடற்கரையை 5.7 அடியில் அதிக அலைகள் தாக்குவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஹவாயின் மௌய் – கஹுலுயில் 5.7 அடி (1.74 மீ) உயரத்தை எட்டும் அலை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஹவாயின் ஹைலோவில் 4.9 அடி (1.5 மீ) உயரத்தில் ஒன்று பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி அலைகளின் தாக்கம் வீரியமடைந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹவாயின் முக்கிய நகரான ஓஹுவின் ஹலீவாவில் 4 அடி உயர அலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவின் அவசரகால நிர்வாகத்தின் சமீபத்திய அறிவிப்பில், மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியேற்ற மண்டலத்திற்கு அப்பால் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அலைகள் தற்போது ஹவாயை தாக்கி வருவதாகவும், சுனாமி எச்சரிக்கை நடைமுறையில் இருப்பதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்லும் வரை அவர்கள் எச்சரிக்கை பகுதிக்குள் மீண்டும் உள்ளே நுழைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் தரவுகளின்படி, சுனாமி அலைகள் அமெரிக்க கடற்கரைகளைத் தாக்கத் தொடங்கியுள்ளன.

அதன்படி, சுனாமியின் முதல் அலைகள் ஹவாயின் கடற்கரைகளை அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த தரவுகளின்படி, ஹவாயின் ஓஹு தீவின் வடக்குக் கரையில் உள்ள ஹலீவாவில் நீர் மட்டம் 4 அடிக்கு (1.2 மீட்டர்) மேல் பதிவாகியுள்ளது. அதிக அலைகள் நெருங்கும்போது நீர் மட்டங்கள் உயர்ந்து குறைவதை காண வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை, அலாஸ்காவை முன்னதாகவே முதல் சுனாமி அலைகள் தாக்கியதாகவும் தற்போது அலைகள் ஹவாயைத் தாக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் சுனாமி அலைகள் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக எச்சரித்துள்ளது.

சுனாமி அலைகள் அதன் தீவுகளை நெருங்கும் போது ஹவாயின் கடற்கரையின் சில பகுதிகளில் கடல் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது என்று நேரடி வெப்கேம்கள் தெரிவிக்கின்றன.

ஹொனலுலுவின் தலைநகரான கவாய் மற்றும் ஓஹு தீவுகளிலிருந்து வரும் பல வெப்கேம்கள், கடைசி ஒரு மணி நேரத்தில் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்து வருவதைக் காட்டுகின்றன.

பாரிய சுனாமி அலைகள் வருவதற்கு முன்பு பொதுவாக கடல் நீர், கடற்கரையிலிருந்து வழக்கத்திற்கு மாறாக வெகு தொலைவில் பின்வாங்கும்.

இந்நிலையில், குறித்த தீவுப்பகுதியில் இவ்வாறு நீர் உள்வாங்கப்படுவது சுனாமி அச்சத்தை அதிகரித்துள்ளது.

இன்று ரஸ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த கடலோர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நெமுரோ மற்றும் ஹொக்கைடோவின் மூன்று பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின.

சிறப்புச் செய்திகள்