நவம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய திட்டம்!

முச்சக்கர வாகனங்கள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் பிற வாடகை வாகன நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபாலா இந்த நடவடிக்கையை அறிவித்தார். இந்த திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து சேவைகள் தொடர்பான தரவு சேகரிப்பை உள்ளடக்கும் என்றும், இந்த திட்டம் நவம்பர் 1 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் […]

தீபாவளி பண்டிகை, நீண்டவார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவையினை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது. வீதி […]

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணித்த அரச பேருந்து!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து நேற்றையதினம்(15) பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி நோக்கு புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ஊற்றுப்புலம் சந்திக்கு அப்பால் மிகவும் ஆபத்தான நிலையில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது. பேருந்துக்குள் மிக அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேருந்தின் இரண்டு வாசல்கள் மற்றும் பேருந்து பின்பகுதியான பவர் பகுதியிலும் பயணிகளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து பயணித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இவ்வாறு இதே வழி தடத்தில் தனியார் பேருந்து இவ்வாறு பயணிகளை […]

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர்கள் இடைநீக்கம்!

பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமைக்காக மேல் மாகாணத்தில் 57 பேருந்து நடத்துனர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற தளபதி காமினி ஜாசிங்க தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட நடத்துனர்களுக்கு மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் ஒரு நாள் பயிற்சிப் பட்டறையையும் நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். […]

யாழ் – கொழும்பு அதிசொகுசு பேருந்தில் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பிலிருந்து யாழ். செல்லும் இரவுநேர அதிசொகுசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்த நபர் ஒருவருக்கு இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகளின் தொல்லையால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த பயணி காணொளி ஒன்றினை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பயணியின் காணொளி பதிவிற்கமைய, பேருந்தின் இருக்கைகளில் மூட்டை பூச்சிகள் இருந்துள்ளன. இதனை தொடர்ந்து, அந்த நபர் நடத்துனரை அழைத்து இது தொடர்பில் தெரியப்படுத்தியமைக்கு நடத்துனர், அசமந்த போக்காக பதிலளித்துள்ளார். அதாவது, “இது எங்களுடைய பேருந்து இல்லை. எமது […]

பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பயணச்சீட்டு வழங்காத 33 பேருந்து நடத்துநர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் முதலாம் திகதி, 347 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 22 பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேற்று 118 பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதில் 11 பேருந்துகள் பயணச்சீட்டு வழங்காமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டதாகவும் காமினி ஜாசிங்க தெரிவித்தார். முன்னர், சுமார் ஐம்பது சதவீத பயணச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. தற்போது […]

நீண்டதூர சேவை பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் உள்ள உணவகங்கள், முறையிட விசேட இலக்கம்

நீண்டதூர சேவை பேருந்துகள், பயணிகள் தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்படும் உணவகங்களில், உணவுகள் மற்றும் பானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்கப்பட்டால், அதுகுறித்து முறைப்பாடளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அந்த அதிகாரசபையின் “1977” என்ற துரித இலக்கத்துக்கு இத்தகைய முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். இந்த அறிவுறுத்தல் பெந்தலுவ-பரகடுவ பகுதியில் உள்ள ஓர் உணவகம் தொடர்பாக வந்த முறைப்பாட்டை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டமை குறித்து […]