வடமத்திய மாகாணத்தில் மண்ணெண்ணெய்யில் ஓடும் பேருந்துகள்,காவல்துறையினர் திடீர் ஆய்வு!

வடமத்திய மாகாணத்தில் பெரும்பாலான பொது பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மண்ணெண்ணெய்யில் இயங்குவதாக வந்த முறைப்பாட்டின் பேரில், வடமத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவசர ஆய்வு நடத்தினர். அந்த பேருந்துகளில் 95% மண்ணெண்ணெய்யில் இயங்குவது தெரியவந்தது. அந்த நேரத்தில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் சாலை அனுமதிகளை இரத்து செய்வது உட்பட எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தனியார் பயணிகள் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவர்!

இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே 13 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பெல்மடுல்ல, கனேகம பகுதியை சேர்ந்த 32 வயதான மதுபாஷினி என்பவரே உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் ஒரு குழந்தையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் […]

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!

வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 40 பேருந்துகளில் AI கட்டுப்பாட்டு உபகரணங்கள் பொருத்தப்படும் என்றார். சிசிடிவி கேமராக்களை மனிதர்கள் கண்காணிக்க வேண்டியிருக்கும் என்பதால், AI-கட்டுப்படுத்தப்பட்ட கருவிகளை அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளதாக அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார். மனிதர்கள் பணியில் […]

விபத்துக்குள்ளான யாழ் பஸ் – 51 பேர் காயம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து இந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 51 பேர் காயமடைந்திருப்பதாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.