கண்ணீர் விட்டு கதறிய ரொனால்டோ

ஸ்லோவேனியா அணியுடன் கூடுதல் நேர பெனால்டியை தவறவிட்டதால் ரொனால்டோ கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனியில் யூரோ கிண்ணம் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், காலிறுதிக்கு தகுதிபெறும் பொருட்டு, கடைசி 8 அணிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், ஸ்லோவேனியா அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பெனால்டியை ரொனால்டோ தவறவிட்டுள்ளார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமனில் முடித்துக்கொள்ள, கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இதில் போர்த்துகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 105வது நிமிடத்தில் ரொனால்டோவின் பெனால்டி கோலை ஸ்லோவேனியாவின் Jan Oblak மிக சாமர்த்தியமாக தடுத்தார்.

இது ரொனால்டோவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததுடன், தாங்கிக்கொள்ள முடியாமல் அவரை கண்ணீர் விட்டு கதற வைத்துள்ளது. ரொனால்டோவின் தாயாரும் இதே வேளை வருத்தமுடன் காணப்பட்டார்.

சக வீரர்கள் ரொனால்டோவை தேற்ற முயன்றும், ரொனால்டோவால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. மட்டுமின்றி, சர்வதேச தொடர் ஒன்றில் 7 ஆட்டங்களில் கோல் ஏதும் பதிவு செய்ய முடியாத மிக மோசமான நிலைக்கு ரொனால்டோ தள்ளப்பட்டார்.

ஸ்லோவேனியாவுக்கு எதிராக சில வாய்ப்புகள் ரொனால்டோவுக்கு அமைந்தாலும், அந்த வாய்ப்புகள் அனைத்தையும் ஸ்லோவேனியா வீரர்கள் முறியடித்துள்ளனர்.

இதனையடுத்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதிலும், ரொனால்டோ வாய்ப்பை தவறவிட, 3-0 என ஸ்லோவேனியாவை வென்றிருந்தாலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் நிலையில் ரொனால்டோ இல்லை. மட்டுமின்றி, போர்த்துகல் கால்பந்து ரசிகர்களிடம் செய்கை ஊடாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

சிறப்புச் செய்திகள்