மீண்டும் எரிபொருள் வரிசை?

நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையில் நிற்கும் போக்கு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வாரந்தோறும் எரிபொருள் விநியோகம் குறைக்கப்படுவதால், எரிபொருளைப் பெறுவதற்கு வரிசைகள் உருவாகி வருவதாகவும் அச்சங்கம் கூறுகிறது.

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்கக்கூடிய நிலையில், எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மட்டும் எரிபொருள் வழங்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, QR முறைமையின் அடிப்படையில் எரிபொருளைப் பெற மக்கள் வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்