இடிமின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

முல்லைத்தீவு – ஐயங்கன்குளம் பகுதியில் இடிமின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம், இன்று (29) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மேலே இடி விழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஐயங்கன்குளம் பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியான மூன்று பிள்ளைகளின் தந்தை காளிமுத்து சண்முகராஜா (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் பிரபாகரன் (26) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜயங்கன்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறப்புச் செய்திகள்