பாரதி அக்கா பிரான்சில் மரணம்!!

முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் பிரான்சில் சாவடைந்தார்.

இவர் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவன் சிவகணேஸ் (பாபு) வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளர் ஆவார்.

கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சிவகணேஷ் பாரதி
மண் மகிழ – 08.06.1967
விண் நெகிழ – 04.12.2023
பிறந்த இடம் – தருமபுரம்
வாழ்ந்த இடம் – கிளிநொச்சி

தருமபுரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகணேஷ் பாரதி (பதஞ்சலி) அவர்கள் 04.12.2023 அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா காலம் சென்ற வள்ளியம்மைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகணேஷ்(கோல்சர் பாபு) அவர்களின் அன்பு மனைவியும்,

அலையிசை, அரும்பரிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வேலவன், பகீரதி, ஈழவன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,

காண்டீபன், கௌரி, சிவநிதி, மோகனச்சந்திரன், பாரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூத உடல் வெள்ளி 08.12.2023 முதல் திங்கள் 11.12.2023 , காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை (பிரான்ஸ் நேரம்) பார்வைக்காக வைக்கப்பட்டு,
இடம் –
ROC-ECLERC
26, Avenue Léon Blum
64000 PAU, FRANCE

இறுதிக்கிரிகை 12.12.2023 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை (பிரான்ஸ் நேரம்) , மதியம் 1 மணி முதல் மாலை 6 மணியளவில் (இலங்கை நேரம்) இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்.

இலங்கை முகவரி –
46, ‘வன்னி மலர்க்காடு’ ,
இந்துபுரம், முறிகண்டி, கிளிநொச்சி,
இலங்கை.

தொடர்புகளுக்கு….
அலையிசை – மகள் ( பிரான்ஸ்)
+33 7 83 38 29 62
அரும்பரிதி – மகன் ( பிரான்ஸ்)
+33 7 68 27 32 40
முருகேசு – தந்தை ( இலங்கை)
+94 76 733 7693
வேலவன் – தம்பி ( இலங்கை)
+94 76 8965 999
ஈழவன் – தம்பி ( இலங்கை)
+94 76 73 53 527
பகீரதி – தங்கை ( நோர்வே)
+47 458 57 655

சிறப்புச் செய்திகள்