அத்தியாவசிய பொருட்களின் விலையில் வீழ்ச்சி! நுகர்வோருக்கு பயன் இல்லை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும்; இதுவரையில் குறித்த நிவாரணத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கு சில்லறை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பின் மொத்த விலை தற்போது 420 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 270 ரூபாவாக குறைவடைந்துள்ளது. ஆயிரத்து 900 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோகிராம் […]

அமெரிக்கத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இன்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடியதோடு, இலங்கை மக்களின் அவசர மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் அனைத்துத் துறைகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதற்கான கருத்துகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அமெரிக்க தூதுவர் – சஜித் பிரேமதாச இடையே முக்கிய சந்திப்பு! இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் […]

மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்க நடவடிக்கை

மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும். பராமரிப்பு தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என […]

அரச அதிகாரிகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

அரச அதிகாரிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல்,அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் அரச பணியாளர்களுக்கு,குடியுரிமை இல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கில் பணத்தை அனுப்ப முறையான ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், மூன்று மாதங்களுக்கு […]

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 41 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 72 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. பவுண்ட் […]

முட்டை விலை குறைகிறது!

முட்டை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய திகதியில் முட்டையொன்றின் விலை 68 ரூபாவாக காணப்பட்டதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் […]

மேலுமொரு மசகு எண்ணெய் கப்பல்

இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் கப்பலில் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி இன்று (18) ஆரம்பிக்கப்பட உள்ளது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெ அடங்கிய குறித்த கப்பல் கடந்த 13ஆம் திகதி இரவு நாட்டை வந்தடைந்தது. அதன் ஆய்வக பரிசோதனையின் பின்னர், இன்று முதல் மசகு எண்ணெய் தரையிறக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன்படி, தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் […]