அரச அதிகாரிகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு!

அரச அதிகாரிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பரிந்துரை திட்டத்தை விரிவுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி அரசத்துறை பணியாளர்களை உற்பத்தி ரீதியான பணிகளில் ஈடுபடுத்தல்,அதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரித்தல் குறித்த திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறும் அரச பணியாளர்களுக்கு,குடியுரிமை இல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்கு அல்லது ரூபாய் கணக்கில் பணத்தை அனுப்ப முறையான ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது பணத்தை இலங்கைக்கு அனுப்புவதை உறுதிப்படுத்துவதுடன், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்த அரசாங்க ஊழியர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை விரைவாக கண்டறிவதற்கும் வழியேற்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம்,வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு விடுப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் வங்கிக் கடன்கள் மற்றும் ஓய்வூதியப் பங்களிப்புகளை பெற்றுக்கொடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் முறைமையொன்றை இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தயாரித்து நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் ஓய்வூதியப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்