இலங்கையில் இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்திய ரூபாய் வர்த்தக பரிவர்த்தனை நாணயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான பரிவர்த்தனை நாணயமாக இந்திய ரூபாய் மத்திய வங்கியினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இனிமேல் இலங்கையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள் உத்தியோகபூர்வமாக வங்கிகளில் இந்திய ரூபாயை பயன்படுத்தி தங்களுடைய அந்நியச்செலாவணி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். டொலர், பவுண்ஸ் மற்றும் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு நாணயங்களுக்கான கேள்விகள் […]

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த பரீட்சை முடிவுகளுக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய […]

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானம்

17 ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட வட்டியில்லா கடனை முற்றாக கைவிட சீனா தீர்மானித்துள்ளதாக சீன இராஜாங்க அமைச்சர் சாங் யீ அறிவித்துள்ளார். அண்மையில் செனகலில் நடைபெற்ற சீன-ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றத்தின் 8வது அமைச்சர்கள் மாநாட்டில் சீன இராஜாங்க அமைச்சர் இந்த முடிவை அறிவித்துள்ளார். சீனாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலான பொதுவான அபிவிருத்திக்கான புதிய சகாப்தத்திற்கான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2021 நவம்பரில் செனகலின் டாக்கரில் நடைபெற்ற சீனா-ஆபிரிக்க ஒத்துழைப்புக்கான மன்றத்தின் அமைச்சர்கள் […]

சாதாரண குடும்பத்தின் மாதாந்தம் நுகர்வுக்கான செலவு 110,000 ரூபாவாக உயர்வு

நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளமையினால் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் நுகர்வுக்கான செலவு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளவிபரவியல் ஆய்வுகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தவிடயம் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சாதாரண குடும்பம் ஒன்றுக்கு மாதாந்த நுகர்வுக்கான செலவு 63 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டது. எனினும் தற்போது குறித்த தொகை 47 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எமது செய்தி […]

வெளிநாட்டு நாணய கையாளுகை, காவல்துறை எச்சரிக்கை!

முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணயங்களை கையாளும் நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. காவல்துறைமா அதிபரினால் காவல்துறை சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான பிரிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய சட்டரீதியான வங்கி செயற்பாடுகளுக்கு புறம்பாக முறையற்ற விதத்தில் வெளிநாட்டு நாணய பரிமாற்றம் மற்றும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் ஊடாக வௌ;வேறு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது. இதன் […]

தட்டுப்பாடின்றி விநியோகிக்க எரிபொருட்கள் கையிருப்பில்

தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யக்கூடிய வகையில், டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களும், கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையததின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து எரிபொருளை உற்பத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருட்களும் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய முனையங்களில் […]

ஒரு மணிநேரம் மாத்திரமே மின்வெட்டு!

இன்று (28) இரவு ஒரு மணிநேரம் மாத்திரம் மின்வெட்டினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேவை குறைந்ததாலும், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மீண்டும் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த வாரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படும் விதம், கிடைக்கப்பெறும் வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்! நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை […]