நாட்டில் கடும் மழை! வெள்ள அபாய எச்சரிக்கை !

நீர்பாசன திணைக்களம் இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது. ஆறுகள் மற்றும் துணை நதிகளை பயன்படுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதேவேளை, நாட்டின் […]

இலங்கை பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் தேங்காய், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

கடந்த இரு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவக் கூடும் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் குறைந்தளவிலான தேங்காய் உற்பத்தியே கிடைக்கப்பெறும். தொடர்ந்தும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படும் பட்சத்தில் அதற்கான தட்டுப்பாடு மேலும் தீவிரமடையக் கூடும். நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தெங்கு […]

கொழும்புக்கு தொடரூந்து மூலம் மரக்கறி!

மலைநாட்டு பிரதேசங்களில் இருந்து மரக்கறிகள் மற்றும் பழவகைகளை கொழும்புக்கு எடுத்து வர தொடரூந்துகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக ஹாலி எல தொடரூந்து நிலையத்தில் இருந்து கொழும்பு தொடரூந்து நிலையத்துக்கு விசேட தொடருந்து சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று கொழும்பில் இருந்து பதுளைக்கான தொடரூந்தில் மொத்த விற்பனைக்கான பொருட்களை எடுத்துச்செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர […]

வரி உயர்வு, நிதியமைச்சர் அறிவிப்பு

2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 12% இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராக சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்தோடு அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். புலத்தையும் நிலத்தையும் […]

மேலும் இரு நாடுகள் இலங்கைக்கான பயணத்தை தளர்த்தின!

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும் வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளின் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சியால் சுற்றுலாத் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஸ்கண்டிநேவிய நாடுகள் கடந்த காலங்களில், குளிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவந்திருந்தமையினால், சுற்றுலாத் துறைக்கு இது ஒரு அனுகூலமான செய்தியாகும். பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை […]

நாணய நிதியத்துடனான பேச்சு வெற்றி – ரணில்

இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை. சிலர் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். எனினும் பலர் பொருளாதார பிரச்சினையின் ஆழத்தை அறிந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டின் எதிர்வரும் காலத்துக்கான இடைக்கால பாதீட்டு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்துக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார் இலங்கையின் முரண்பாட்டு அரசியலே பொருளாதார பின்னடைவுக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டின் இந்த வரவுசெலவுத்திட்டம், சர்வதேச நாணய […]

இடைக்கால பாதீடு 773 பில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) நிதியமைச்சராக, இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால பாதீட்டு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனையடுத்து, பிற்பகல் 2 மணிவரை நிதியமைச்சரின் பாதீட்டு உரை இடம்பெறும். அதனையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதுடன், இடைக்கால பாதீட்டு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், நாளை (31) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு […]