மேலும் இரு நாடுகள் இலங்கைக்கான பயணத்தை தளர்த்தின!

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை தளர்த்திய நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை எதிர்பார்த்ததை விட சிறந்த மீட்சிக்கான அறிகுறிகளைக் காணும் வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. இரு நாடுகளின் அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அண்மையில் ஏற்பட்ட வளர்ச்சியால் சுற்றுலாத் தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்கண்டிநேவிய நாடுகள் கடந்த காலங்களில், குளிர்காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுவந்திருந்தமையினால், சுற்றுலாத் துறைக்கு இது ஒரு அனுகூலமான செய்தியாகும்.

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைக்கான பயண ஆலோசனையை கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதியுடன் தளர்த்தியது.

இலங்கைக்கு மேற்கொள்ளும் அத்தியாவசிய பயணங்களைத் தவிர ஏனைய பயணங்களுக்கு எதிராக இனி அறிவுறுத்தல்களை விடுப்பதில்லை என்றும் அந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை நோர்வே, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் முன்னதாக இலங்கைக்கான பயண அறிவுறுத்தல்களை தளர்த்தின.

முன்னதாக குறித்த நாடுகள், இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்வோரை தவிர மற்றைய அனைவருக்கும் பயண ஆலோசனைகளை வழங்கியிருந்தன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்