வரி உயர்வு, நிதியமைச்சர் அறிவிப்பு

2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 12% இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சராக சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்