வெட் வரி அதிகரிப்பு இன்று முதல் அமுல்!

வெட் வரி என்ற பெறுமதி சேர் வரி அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார். இதன்போது அவர், வெட் வரியை அதிகரிப்பது குறித்த யோசனையை முன்மொழிந்திருந்தார். வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பை தொடர்ந்தே வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது வழமையானது. எனினும்இ பெறுமதி சேர் […]

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புகிறார்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்ப உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜீன் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்திருந்தனர். இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார். அத்துடன், கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றிருந்தார். இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை […]

இலங்கையின் வரிவருமானம் 29 சதவீதம் அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டின் மே மாதம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் வரிவருமானம் 29 சதவீதம் அதிகரித்து 811.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த காலப்பகுதியில் அரச செலவீனம், 16 சதவீதத்தால் அதிகரித்து 1,275 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 162.4 பில்லியன் ரூபாவிலிருந்து 174.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்நாட்டுக் கடன் 742.7 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை […]

இலங்கையில் பெட்ரோலிய வர்த்தகம்: 24 நிறுவனங்கள் முன்மொழிவு

இலங்கையில் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 சர்வதேச நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களே முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள பிரபல […]

மா இருப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை இன்று விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. கோதுமை மா இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அந்தக் கலந்துரையாடலில், கோதுமை மா உற்பத்தி விலை மற்றும் […]

வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை

முறைகேடாக இடம்பெறும் வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் பொலிஸ்மா அதிபரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடைந்தமைக்கு அந்நிய செலாவணி பற்றாக்குறையே பிரதான காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உண்டியல் போன்ற முறைகள் மூலம் சட்டரீதியான வங்கி முறைக்கு வெளியே பணப்பரிமாற்றம் செய்வதும் நெருக்கடிக்கான காரணம் என […]

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அறிவித்துள்ளார். இதனடிப்படையில் பணியாளர் அளவிலான உடன்படிக்கையான முதல் மைல்கல்லை விரைவில் அடைய முடியும் என்று தாம் நம்புவதாக மத்திய வங்கியின் தலைவர் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையை இன்று முன்வைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை […]