மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால்

மாணவி ஒருவரின் தாய்க்கும் ஆசிரியை ஒருவருக்கும் ஏற்பட்ட ஓரினக் காதலால் இரு பெண்களும் ஓடிய சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருகையில், வத்தளையை சேர்ந்த 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறித்த பாடசாலையில் உள்ள 29 வயது உடைய ஆசிரியையுடன் மாணவியின் தாயார் நட்புடன் பழகி வந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இதன்பின் திடீரென இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனைத் அடுத்து […]
இலங்கை இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.8373ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.4417 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
இலங்கையில் இன்றைய தங்க விலைச் சுட்டெண்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (07) வெள்ளிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,400 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 195,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,600 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 180,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தனுஷுடன் இணைந்தார் ராஷ்மிகா

நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என கடைசி மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன.‘பவர் பாண்டி’க்கு பிறகு தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முழு ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதில் அவருடன் அபர்ணா முரளிதரன், தூஷாரா விஜயன், சந்தீப், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் நடிக்கின்றனர். திரைக்கதை முழுக்க, முழுக்க […]
தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது – இரா.சம்பந்தன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது எனவும் தென்னிலங்கையில் உள்ள தலைவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்தே இறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு கொழும்பிலுள்ள ஆர்.சம்பந்தனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற ஆணையைத் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நிராகரித்து வருகின்ற நிலையில் தேர்தல்களை நடத்தப்படுவதற்கு […]
14 வருடங்களுக்கு பிறகு சிம்புவுக்கு ஜோடியான த்ரிஷா!

அலை, விண்ணைத்தாண்டி வருவாயா என இரண்டு படங்களில் சிம்பு, த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. இந்த நிலையில் இருவரும் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். மணிரத்னம், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் தான் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். இப்படத்தில் இருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் என அடுத்தடுத்து மூன்று ஹீரோக்களும் அதிரடியாக விலகினர். இதையடுத்து துல்கருக்கு பதிலாக, சிம்பு இப்படத்தில் […]
2ஆவது நாளாக தங்கத்தின் விலை சரிவு..

ஆபணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது குறைந்து வருகின்றது. இன்று சவரனுக்கு 8 இந்திய ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.6,725 ஆகவும், சவரன், ரூ.53,800 ஆகவும் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து 6,724 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 8 குறைந்து, ரூபாய் 53 ஆயிரத்து 792 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று […]