14 வருடங்களுக்கு பிறகு சிம்புவுக்கு ஜோடியான த்ரிஷா!

அலை, விண்ணைத்தாண்டி வருவாயா என இரண்டு படங்களில் சிம்பு, த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இதில் விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது.

இந்த நிலையில் இருவரும் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து நடித்து வருகின்றனர். மணிரத்னம், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் தான் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் இருந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சித்தார்த் என அடுத்தடுத்து மூன்று ஹீரோக்களும் அதிரடியாக விலகினர்.

இதையடுத்து துல்கருக்கு பதிலாக, சிம்பு இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படத்தில் நடித்திட மேலும் சில ஹீரோக்களிடமும் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தற்போது ஜெய்சல்மார், டெல்லி ஆகிய இடங்களில் படக்குழு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்தி வருகிறது. விரைவில் கமலும் படத்தில் இணையவிருக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பினை செர்பியாவில் நடத்திட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். தற்போது சிம்பு, த்ரிஷா, நாசர், கவுதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகிய நட்சத்திரங்கள் இப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

புதிய தகவலின்படி தக் லைஃப் வருகின்ற 2024-ம் ஆண்டு சம்மருக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிய முடிகின்றது.

சிறப்புச் செய்திகள்