கனடாவில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்.!

கனடா Markham பகுதியில் அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கடந்த 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார். சம்பவத்தில் ஜெயகுமார் தனோஷன் 25 அகவையுடைய இளைஞரே இவ் விபத்தில் பலியாகியுள்ளார், இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும் குறித்த ஒவ்வாமையானது தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் ஏற்படுவதாகவும் […]
கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும், சஜித்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியிருந்தார் இதன்போது எமது ஆட்சி உருவாகும்போது கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் […]
ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் – பிரான்ஸ் ஜேர்மனி அரசியலில் குழப்பம்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சிகள் பெரும் வெற்றிபெறலாம் என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐரோப்பாவில் நிச்சயமற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளில் மூன்று நாட்கள் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ள நிலையில் தீவிரவலதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறலாம் என முன்கூட்டிய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. 720 ஆசனங்களில் 150க்கும் அதிகமான ஆசனங்களை வலதுசாரி கட்சிகள் கைப்பற்றலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் இத்தாலி ஜேர்மனி போன்ற […]
இலங்கையில் வெளிநாடு வேலைவாய்ப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 25 வீதம் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதியில் முதலாவது குழு இஸ்ரேல் செல்லவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்னேரிய காலாட்படை பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வூதியம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வில் கலந்து கொண்டு […]
இலங்கையில் காணாமல் போன மாணவி ஹரிவதனி சடலமாக மீட்பு!

காணாமல் போன கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே அம்மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது… சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா […]
உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளை பெற்று சாதனை புரிந்த 15 வயது சிறுமி !

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ, விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 16 ஆவது இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ஆராச்சிக்கட்டுவ , விஜயகடுபொத பிரதேசத்தில் வசிக்கும் மஞ்சநாயக்க முதியன்சலாகே அவீஷா நெட்சரணி மஞ்சநாயக்க எனும் 15 வயதுடைய சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளார். பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் போதே, கல்வி கற்பதில் […]