இலங்கையில் தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதாகவும் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும் குறித்த ஒவ்வாமையானது தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குழந்தைகளுக்காக கொள்வனவு செய்யப்படும் சவர்க்காரத்தின் தர நிர்ணயம் தொடர்பாக அதிக அவதானம் செலுத்துமாறு அவர் பெற்றோருக்கு வலியுறுத்தியுள்ளார்.

சிறப்புச் செய்திகள்