சம்பந்தன் ஐயா தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..!

  1. இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் அப்போது அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயாவுக்கு தாயகத்தலைமகன் எனும் பட்டம் 2014, செப்டம்பர்,27, ம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  2. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழும் வீரர்’ விருது -2016, ஜனவரி,14, கனேடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

புலிக்கொடியும் சிங்கக்கொடியும்.. !

  1. சம்பந்தன் ஐயா 2012, மே,01, ல் யாழ்ப்பாண மேதினத்தில் மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
    அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை.
  2. ஆனால் சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல் ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார் அந்த நிகழ்வில் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டோம்.
  3. 2004,மாவீரர் நாள் 2004, நவம்பர்,27 அன்று சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22, உறுப்பினர்களும் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன். சம்பந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு.

-பா.அரியநேத்திரன்-
03/07/2024

சிறப்புச் செய்திகள்