சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் அரிசி விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 190 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார். வழமையாக ஜனவரி மாதத்தில், குறித்த ஆண்டுக்கான பெரும்போக அரிசி சந்தைக்கு கிடைக்கும். ஆனால், உரப் பிரச்சினை காரணமாக இந்த முறை போதியளவான […]

வெளிநாட்டு அக்கவுண்ட் வைத்திருக்கும் பணத்தை இலங்கை ரூபாய்க்கு மாற்றும் அரசு?

வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக்கணக்குகளில் உள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வெளிநாட்டு நாணயக்கணக்கைப் பேணும் சில வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கான கோரிக்கை குறித்த வங்கிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக விண்ணப்பமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருப்பதாகவும் சமூகவலைத்தளப்பக்கங்களில் பதிவுகளைச் செய்திருந்தனர். இவ்வாறான சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் […]

சீனாவுடனான பணப்பறிமாற்றல் ஊடாக அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனை எட்டியது

வெளிநாட்டு கடன் தவணை மற்றும் வட்டி என்பவற்றை மீள செலுத்துவதில் ஒருபோதும் நெருக்கடி ஏற்படாது. சீனாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பண பறிமாற்றல் ஊடாகவே நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 3 பில்லியனை எட்டியுள்ளதான அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இம்மாதம் 18 ஆம் திகதி 500 மில்லியன் மற்றும் ஜூன் மாதம் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது. கடனை மீள செலுத்துவதற்காக அரசாங்கத்திடம் காணப்படும் வேலைதிட்டம் என்ன […]

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவித்தல்

வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக்கணக்குகளில் உள்ள டொலர்களை வலுகட்டாயமாக ரூபாவாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் நாட்டிலுள்ள ஏனைய வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வெளிநாட்டு நாணயக்கணக்கைப் பேணும் சில வாடிக்கையாளர்கள் தமது கணக்கிலுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கான கோரிக்கை குறித்த வங்கிகளால் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக விண்ணப்பமொன்றில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டிருப்பதாகவும் சமூகவலைத்தளப்பக்கங்களில் பதிவுகளைச் செய்திருந்தனர். இவ்வாறான சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் […]

அத்தியாவசிய பொருட்களின் விலை இனிவரும் நாட்களில் குறைவடையாது

இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்கள் மீதான வரி நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடையாது. இனி வரும் நாட்களில் கட்டம் கட்டமாக விலை குறைவடையாது என தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, எதிர்வரும் நாட்களில் அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகிற நிலையில் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற சிறந்த அமைச்சினை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் -19 வைரஸ் பரவல் தாக்கத்தினால் பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு […]

சிறந்த உணவு உற்பத்தி நிறுவனத்துக்கான விருதினை பெற்றுள்ள தனியார் நிறுவனம்

BWIO USA ஏற்பாடு செய்த சர்வதேச விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. வர்த்தக துறையில் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுத்து நுகர்வோருக்கு சிறந்த சேவையாற்றிய நிறுவனங்களை கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் Abitha Products தனியார் நிறுவனமும் விருதினைப் பெற்றுக்கொண்டது. முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கெளரவ சமல் ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விருது விழாவில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த உணவு உற்பத்தி நிறுவனமாக Abitha […]

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 30 வீதத்தினால் அதிகரிப்பு

அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் தவறான தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இறுதியில் பல்பொருள் அங்காடிகளில் (சூப்பர்மாக்கெட்) 30 வீதத்தினால் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் இலங்கைக்கான பொதுக் கொள்கை யோசனைகளை முன்வைக்கும் சுயாதீன சிந்தனைக் குழுவான ‘அட்வகாட்டா’ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. நட்பு நாடுகளிடம் எதிர்காலத்தில் கடன் கேட்டு செல்லும் வேளையில் தமக்கு நம்பிக்கையான ஒரு நபரை […]